ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் சரண்

ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் சரணடைந்தனர்.;

Update: 2023-10-26 08:37 GMT

கொலை வழக்கில் இருவர் சரண்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல்லில் மதுரை ரவுடி வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். திண்டுக்கல் பாரதிபுரத்தில் கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவு மதுரை மாவட்டம் பரவை சேர்ந்த ரவுடி கௌதம்(38) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த லட்சுமணன்(28), சுதாகர்(34) ஆகிய 2 பேர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.2 பேரையும் வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க ஆத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News