கஞ்சனூர் அருகே தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சேதம்
கஞ்சனூர் அருகே திடீ ரென தீப்பிடித்து விபத்து. இரண்டு கடைகள் சேதம்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 11:50 GMT
கஞ்சனூர் அருகே தீ விபத்தில் 2 கடைகள் எரிந்து சேதம்
விழுப்புரம் அருகே காகுப்பம் ஷர்மா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 36). இவரது மனைவி மதுபாலா சக்திவேல் கஞ்சனூர் அருகே நேமூர் கடை வீதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இந்த கடையின் அருகில் மதுபாலா பேன்ஸி ஸ்டோர் கடை நடத்தி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் சக்திவேல் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடை திடீ ரென தீப்பிடித்து எரிந்தது, இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தீயை அணைக்க முயன் றார். ஆனால் தீ அருகில் இருந்த அவரது மனைவியின் பேன்சி ஸ்டோர் கடைக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்துகொண்டு கடையில் இருந்து வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தரேஸ்வரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர், இருப்பினும் தீ விபத்தில் 2 கடையும் முற்றுலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.