குமரி அருகே வீட்டில் தொந்தரவு செய்த 2 மரநாய்கள் சிக்கின

குமரி அருகே வீட்டில் தொந்தரவு செய்த 2 மரநாய்கள் சிக்கியது.

Update: 2024-01-29 12:56 GMT
கூண்டில் சிக்கிய மரநாய்கள்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியில்   ரத்தீஷ் என்பவர் வீட்டில் இரவு நேரங்களில் மரநாய் தொந்தரவு செய்வதாக மாவட்ட வன அலுவலர் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.  

     இதையடுத்து  மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலருக்கு சம்மந்தபட்ட வீட்டில் இருக்கும் மரநாயை பிடிப்பதற்கு  அறிவுரை வழங்கப்பட்டது.  

     வனச்சரக அலுவலர் ரவீந்திரன்  தலைமையில் வனக்காப்பாளர் அசோக், மற்றும் பிரவீன், சிவா, சிராஜ் ஆகிய வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் மேற்படி வீட்டில் கூண்டு வைத்து இரண்டு நாட்கள் கண்காணித்து வந்தனர்.     

  இதில்  தொந்தரவு செய்த இரண்டு மர நாய்கள் இன்று லாவகமாக பிடிபட்டது. பிடிக்கப்பட்ட மரநாய்கள் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின் பேரில் அடர்ந்த காட்டுக்குள் விட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News