பள்ளிப்பட்டு: இளைஞர்கள் பலியான சோகம்

பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தில் பயிர்களுக்கு வைத்த மின்சார வேலியில் சிக்கி 2- இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.;

Update: 2024-05-20 13:40 GMT

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகில் வெளியகரம் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவரது விவசாய நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது கரும் தோட்டத்தில் காட்டுப்பன்றி தொல்லையால் மின் வேலி அமைத்துள்ளார்.

அந்தப் கிராமத்தை சார்ந்த இளைஞர்கள் சாய்குமார்(27), பார்த்தசாரதி(20) ஆகிய இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அவ்வழியாக சென்றனர். மின் வேலி அமைத்துள்ளது தெரியாமல் வயல்வெளியில் இறங்கிய போது அதில் சிக்கி சம்பவ இடத்தில் இருவரும் உயிரிழந்தனர். இருவரும் சென்று நீண்ட நேரம் ஆனதால் அவர்களை தேடி உறவினர் மற்றும் நண்பர்கள் சென்றனர். அப்போது இருவரும் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பள்ளிப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களின் உடலையும் கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கரும்பு தோட்டத்திற்கு மின்சாரம் வைத்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான கோவிந்தராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News