பாலியல் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை!

புதுக்கோட்டையில் டியூசன் படிக்க வந்த 13 வயது பள்ளி மாணவி மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை என புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2024-03-05 04:40 GMT
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வென்ஷீலிக் இஸ்ரேல் பிட்டு(31) என்பவர் தற்போது புதுக்கோட்டை கூடல் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டை மவுண்ட் ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இதே பள்ளியில் கடந்த 2022 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, இதே ஆசிரியரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார். மற்ற மாணவர்கள் வருவதற்கு முன்பாக சந்தேகம் சொல்லித் தருவதாக கூறி தனி அறைக்கு சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் கொடுத்துள்ளார். தொடர்ந்து மாணவியை மிரட்டி பலமுறை தாக்குதல் நடத்தி வந்துள்ளார். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் செய்தது உறுதியானது. இது தொடர்பான வழக்கு விசாரணை முழுவதும் நிறைவு பெற்று இன்று புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.
Tags:    

Similar News