மதுரவாயல்: 200 கிலோ குட்கா பறிமுதல்
கூரியர் வேனில் கடத்திய 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 16:05 GMT
குட்கா பறிமுதல்
மதுரவாயல் வழியாக சென்னைக்கு, குட்கா போதை பொருள் கடத்தப்படுவதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரவாயல் அடுத்த வானகரம் சிக்னலில், நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த கூரியர் வேனை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், குட்கா இருந்தது. இதையடுத்து, வேன் ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். தொடர் விசாரணையில், பிடிபட்டவர் பூந்தமல்லி பாரிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி, 33, எனத் தெரிந்தது. அவர் பெங்களூரில் இருந்து குட்கா கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. அவரிடமிருந்து 200 கிலோ குட்கா மற்றும் 25,000 ரூபாய், வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்