200 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்த முயற்சி - பறிமுதல் செய்த அதிகாரிகள்

கேரளாவிற்கு மண்ணெண்ணை கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

Update: 2023-12-01 08:34 GMT
ஆட்டோவுடன் பறிமுதல் செய்த கடத்தல் மண்ணெண்ணெய்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் பைபர் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை வியாபாரிகள் வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்கும் வகையில், வருவாய்துறையினர், மற்றும் காவல் துறையினர், மண்ணெண்ணெய் கடத்தி செல்லப்பட்ட வாகனங்களை மடக்கி பிடித்து வருகின்றனர். நேற்று காலை 11 மணியளவில் கொல்லங்கோடு காவல் நிலைய ஏட்டு கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, திருமன்னம் சந்திப்பு வழியாக, கேரள பதிவெண் கொண்ட ஒரு பயணிகள் ஆட்டோ வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, பைபர் படகிற்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு கேன்களில் சுமார் 200 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மண்ணெண்ணெய் மற்றும் ஆட்டோவை கைப்பற்றி கொல்லங்கோடு காவல் நிலையம் கொண்டு ஒப்படைத்தனர். போலீசார் ஆட்டோ மற்றும் மண்ணெண்ணெயை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News