2000 வீடுகளுக்கு இருவண்ண குப்பை கூடைகள் வழங்கல்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 2000 வீடுகளுக்கு இருவண்ண குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-01-02 05:11 GMT

நாகப்பட்டினம்மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 2000 வீடுகளுக்கு இருவண்ண  குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தலைமை தாங்கினார் பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார் பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி சேகர் வீடுகளுக்கு தலா 2 குப்பை கூடைகளை வழங்கி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி  அலுவலர்கள் ஊழியர்கள்கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயலாளர் குகன் கூறுகையில் கீழ்வேளூர் பேரூராட்சியில் உள்ள 2000 வீடுகளுக்குநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியை மேம்படுத்தும் விதமாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கீழ்வேளூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை எளிமைப்படுத்தும் விதமாக வீடுகளில் வாங்கப்படும் குப்பையை மக்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பை என எளிதில் பிரித்து தரும் வகையிலும், தூய்மை பணியாளர்களின் பணி சுமையை வெகுவாக குறைக்கும் நோக்கத்துடனும் பேரூராட்சியில் உள்ள 2000 வீடுகளுக்கு இரு வேறு வண்ணங்களில் தலா 2 குப்பை கூடைகள் வீதம் 4,000 குப்பைக் கூடைகள் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் கீழ்வேளூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மேலும் எளிமைப்படுத்தப்பட்டு பேரூராட்சியின் சுகாதாரம் உறுதி செய்யப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.

Tags:    

Similar News