தீபாவளி பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் - திண்டுக்கல் எஸ்.பி
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடை வீதிகள்,சந்தை பகுதிகள்,பஸ் ஸ்டாண்ட்கள்,கோயில்கள் போன்ற பகுதிகளில் கேமராக்களுடன் கூடிய உயர் கோபுர கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.காலை 6:00 மணி முதல் 7:00 மணி,இரவு 7:00 மணி முதல் இரவு 8:00 மணி வரைதான் பட்டாசு வெடிக்க வேண்டும். மாசு,ஒலி குறைந்த பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்க வேண்டும். கூரை வீடுகள்,வைக்கோல் உள்ள பகுதிகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். கம்பி மத்தாப்புகளை கொளுத்திய பின் தண்ணீர் நிரப்பிய வாளியில் போடவும். சிறுவர்களை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டாம். அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.