ஒரே நேரத்தில் கம்பம் ஆடிய 2 ஆயிரம் இளைஞர்கள்
கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற கம்பம் ஆட்டத்தை சீருடை அணிந்து ஒரே நேரத்தில் கம்பம் ஆடி 2 ஆயிரம் இளைஞர்கள்.
சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் விழாவில் சீருடை அணிந்து ஒரே நேரத்தில் சலங்கை கட்டி 2 ஆயிரம் இளைஞர்கள் உற்சாக நடனம் ஆடினார் சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் விழா கடந்த 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவையொட்டி கோவில் முன் மிகப்பெரிய கம்பம் நடப்பட்டு தினந்தோறும் பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை குண்டம் விழாவும் வியாழக்கிழமை இன்று நடைபெற்ற பொங்கல் வைபவம், பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து கம்பத்தை சுற்றி இளைஞர்கள் ஆடும் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இதில் 2 ஆயிரம் இளைஞர்கள் சலங்கை கட்டி உற்சாகமாக நடனம் ஆடினர். ஒரே நிறமுள்ள உடை அணிந்து ஆடிய இளைஞர்களின் பாரம்பரிய நடனம் பார்வையாளர்கள் பெரிதும் கவர்ந்தது.
விழாவில் தமிழகம் கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.