சேலத்தில் 21 வயது மாணவி 20 வயது மாணவனுடன் மாயம்

சேலத்தில் 21 வயது மாணவியுடன் 20 வயது மாணவன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-03-22 14:36 GMT
மாயம் 

ஈரோட்டை சேர்ந்த 21 வயது இளம்பெண் சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் சேலம் கன்னங்குறிச்சியில் தோழிகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி அந்த மாணவியின் தந்தை மகளை செல்போனில் அழைத்தார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த போனை எடுத்துள்ளார். அவர், தனது பெயர் கோபிகிருஷ்ணன் எனவும், உங்களது மகளை தான் காதலிப்பதாகவும் கூறிவிட்டு செல்பேனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை கல்லூரிக்கு வந்து விசாரித்தார்.

Advertisement

அப்போது, IIம் தேதி கல்லூரியில் இருந்து அவரது மகள் டிசியை வாங்கி சென்று விட்டதாக நிர்வாகம் தெரிவித்தது. அப்போது கோபிகிருஷ்ணன் யார் என விசாரித்தபோது, அவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் நயினார்புரத்தை சேர்ந்த 20வயது மாணவன் என்பதும், அதே கல்லூரியில் 2ம் ஆண்டு படிப்பதும், அவரும் அதே நாளில் டிசி வாங்கி சென்றதும் தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை இதுபற்றி கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். இதனிடையே கோபிகிருஷ்ணனின் தந்தை சாரதியும் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் கல்லூரி சென்ற தனது மகனை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News