2,100 பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கிய மாமன்ற உறுப்பினர்

திண்டுக்கல் 44 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மேட்டுப்பட்டி பகுதியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 2,100 பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கினார்;

Update: 2025-10-16 03:30 GMT
திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் தனது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம்பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை தனது சொந்த செலவில் முன்னிட்டு சுமார் 2,100 பேருக்கு இலவச வேஷ்டி , சட்டை மற்றும் சேலைகள் வழங்கினார். இந்நிகழ்வில் அஞ்சல் துறை கணேசன், வார்டு செயலாளர் செந்தில்குமார், மேற்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிஹரன், பேரின்ப முத்து, ஜேம்ஸ் உள்ளிட்ட வார்டு பிரதிநிதிகள் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2100 பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்வு திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News