உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 22 லட்சம் ரூபாய் நிதி உதவி

உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒருங்கிணைந்து 22 லட்சம் ரூபாய் நிதி உதவி

Update: 2023-12-04 05:30 GMT
உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அவருடன் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒருங்கிணைந்து 22 லட்சம் ரூபாய் நிதி உதவி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டி பசும்பொன் தெருவை சேர்ந்த தங்கராஜ்- ஜெயா தம்பதியின் மூத்த மகன் த.செல்வக்குமார்(31). இவர் வத்திராயிருப்பு தனி ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக  பணிபுரிந்து வந்துள்ளார். செல்வக்குமார்   உடல் நிலை சரியில்லாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதனை அறிந்த அவருடன் பணியில் சேர்ந்த 2013 பேட்ஜ் காவலர்கள் செல்வகுமார் அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 2013 ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைத்து நிதி திரட்டப்பட்டது. திரட்டப்பட்ட 22 லட்சம் ரூபாயை   உயிரிழந்த காவலர் செல்வகுமாரின் குடும்பத்தினரிடம் அவருடன் பணியாற்றிய சக காவலர்கள் வழங்கினர்.உதவி செய்த காவலர்கள் அனைவருக்கும் மறைந்த செல்வக்குமாரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Tags:    

Similar News