விழுப்புரம் மாவட்டத்தில் 22 பேர் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
Update: 2023-12-01 10:15 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த சுந்தர்ராஜ், நாகராஜன், செல்வக்குமார், ஏழுமலை, சம்பத்குமார், முருகானந்தம், தயாளு, கிருஷ்ணன், சிவானந்தம், கஜேந்திரன் உள்ளிட்ட 22 பேர் சப்- இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்கள் 5 மாத காலமாக சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான பயிற்சி பெற்றனர். அவர்களது பயிற்சி காலம் முடிவடைந்ததையடுத்து மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பிறப்பித்துள்ளார்.