திண்டிவனத்தில் இளைஞர் தற்கொலை
திண்டிவனம்: மது குடிக்க பணம் தராததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 02:29 GMT
இளைஞர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி மகன் வசந்தகுமார் ( 23). தொழிலாளி. சம்பவத்தன்று இவர், தனது தாய் ஆனந்தியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர் பணம் தராததால் வசந்தகுமார் வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவை யால் தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குவசந்தகுமாரை பரிசோ தித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித் தார். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.