ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி

Update: 2024-09-14 05:51 GMT

சாலை அமைக்கும் பணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆர்.கே.பேட்டை செப்.14: ஆர்கே பேட்டை அடுத்த வேலன் கண்டிகை மற்றும்  அம்மனேரி ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வேலன் கண்டிகையிலிருந்து அம்மனேரிக்கு செல்லும்  சாலை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக காணப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை தற்போது சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக காணப்பட்டது. 




 


பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்,  வேலைக்கு செல்லும் பொதுமக்கள், வியாபாரத்திற்கு செல்லும் வியாபாரிகள் இந்தசாலையில்  செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இரு சக்கர வாகனம், ஆட்டோ போன்றஎந்த வாகனும் இந்த சாலையில் செல்ல முடியாத நிலையே உள்ளது. 

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து வேலன்கண்டிகையிலிருந்து அம்மனேரி செல்லும் சாலையை சீரமைக்க ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்க அரசாணை வழங்கப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், ஒன்றிய செயலாளர் பழனி, ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சி.எம்.ரவி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்:

ஆர்கே பேட்டை ஒன்றியம் வேலன்கண்டிகையிலிருந்து அம்மனேரி செல்லும் சாலையை சீரமைக்க ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பணியை

திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தொடங்கி வைத்தார் . இதில் ஒன்றிய செயலாளர் பழனி, ஒன்றிய குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சி.எம்.ரவி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News