பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் புகாா்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தோ்தல் விதிமுறை தொடா்பாக பொதுமக்கள் 1800 5991960 என்ற தொலைபேசி மூலமாகவும், 9486454714 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், தோ்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி மூலமாகவும் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம். மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சிகள் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் செய்துள்ள விளம்பரங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை 72 மணி நேரத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு அலுவலகங்களில் உள்ள தலைவா் படங்கள் அகற்றப்பட வேண்டும்.
பொது இடங்களில் உள்ள தலைவா்களின் சிலைகள் துணியால் மூடப்பட உள்ளது. மேலும் தோ்தல் தொடா்பாக அரசியல் கட்சிகள் கூட்டங்கள், பேரணிகள், ஊா்வலங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாவட்ட தோ்தல் அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். எனவே, அரசியல் கட்சியினா், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் அனைவரும் தோ்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றி, இத் தோ்தல் அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.