240 ரப்பர் சீட்டுகள் திருடியவர்  கைது

கடையாலுமூடு;

Update: 2025-03-24 04:21 GMT
குமரி மாவட்டம் ஆலஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவர்  கடையாலுமூடு பகுதியில் உள்ள ரப்பர் சீட் குடோனின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினம் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 240 ரப்பர் சீட்டுகள் மாயமாகி இருந்தது. ஆட்கள் இல்லாத போது குடோனில் புகுந்த மர்ம நபர் திருடி சென்றது  தெரிய வந்தது.      இது ஒரு ஏசுதாஸ் கடையாலுமூடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார்  குடோனில் ரப்பர் சீட்டுகளை திருடியதாக திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஜெகன் (39) என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரப்பர் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.       கைதான ஜெகன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவரிடம் விசாரணை நடக்கிறது.

Similar News