25 வருடமாக பேருந்து வசதி இல்லாத கிராமமக்கள் கோரிக்கை மனு
5 கி.மீ சுற்றளவிற்கு பேருந்து வசதியே இல்லாத கிராமங்கள் 25 வருட போராடிவரும் பொதுமக்கள்
மயிலாடுதுறை அருகே 3 ஊராட்சிகளை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் வசிக்கும் பகுதிக்கு, பேருந்து வசதி செய்து தரக்கோரி, கிராம மக்கள் 25 ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர்.
5 ஆண்டிற்கு முன்பே, மினி பேருந்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. ஊர்பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் 100 கணக்கான மனுக்களை அளித்தும், நடவடிக்கை இல்லை. மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம், இன்று 50க்கும்மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் மாத்தூர் கிராமத்தை சுற்றி, 10 க்கும்மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும்வசித்துவருகின்றனர்.
5 கி.மீ.சுற்றளவிற்கு பேருந்து வசதிகிடையாது. 25 ஆண்டுகளாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்குக் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
தனி வேன் வைத்து மாணவர்களை அழைத்துச் செல்ல,வசதியில்லாததால் செம்பனார்கோவில் வழியாக திருக்கடையூர்வரை பேருந்து இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.