25வது வார்டில் சைக்கிளில் சென்று குறைகளைக் கேட்ட மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
திருநெல்வேலி மாநகராட்சி 25வது வார்டுக்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 17) காலை மேயர் ராமகிருஷ்ணன் தனது சைக்கிளில் சென்றபடியே பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்பொழுது ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை மேயரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டுக் கொண்ட மேயர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.இந்த நிகழ்வில் திமுக தகவல் தொழில் அணி காசிமணி உடனிருந்தார்.