மதுராந்தகத்தில் பைக் பழுது நீக்குவார் நல சங்கத்தின் 25வது வெள்ளி விழா

மதுராந்தகத்தில் பைக் பழுது நீக்குவார் நல சங்கத்தின் 25வது வெள்ளி விழா நடைபெற்றது.;

Update: 2024-06-25 10:31 GMT

வெள்ளி விழாவில் கலந்து கொண்டவர்கள் 

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வட்டார இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவார் நல சங்கத்தின் 25 -ஆவது வெள்ளி விழா மதுராந்தகம் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத் தலைவர் சரவணன், செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவர் செல்வம், மாநில பொருளாளர் ஜமால் முகமது ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் சங்க நிர்வாகிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது குறித்தும்,

Advertisement

இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் பொதுமக்களுக்கு செய்த பல்வேறு சேவைகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகன பழுதுநிற்கோர் சங்கத்தை முதல் முதலாக உருவாக்கிய நபர்களுக்கு சால்வை அணிவித்தும், மாலை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News