11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம் !
சிவகங்கை மாவட்டத்தில் பிளஸ் 1 தமிழ் தேர்வு துவங்கிய நிலையில் 260 பேர் ஆப்சென்ட் - மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-05 05:56 GMT
மாணவர்கள்
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இத்தேர்வை எழுத சிவகங்கை மாவட்டத்தில் 81 தேர்வு மையங்களில், 161 பள்ளிகளைச் சேர்ந்த 7ஆயிரத்து 637 மாணவர்கள், 9ஆயிரத்து 22மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உட்பட மொத்தம் 16ஆயிரத்து 659பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 7ஆயிரத்து 469 மாணவர்கள், 8ஆயிரத்து 930 மாணவிகள் உள்பட 16ஆயிரத்து 399 மாணவ, மாணவிகள் நேற்று நடைபெற்ற தேர்வை எழுதினர். 168 மாணவர்கள், 92மாணவிகள் என மொத்தம் 260பேர் தேர்வை எழுதவில்லை. இத்தேர்வு கண்காணிப்பில் இணை இயக்குநர் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் 81 முதன்மை கண்காணிப்பாளர்கள், 81துறை அலுவலர்கள், 1260 அறைக்கண்காணிப்பாளர்கள், 112நிலையான படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் எவ்வித குளறுபடியும் இல்லாமல் நேற்றைய தேர்வு நடந்து முடிந்தது.