பிப்.27, பட்டுக்கோட்டை, பிப்.28, கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்;

Update: 2025-02-20 13:24 GMT
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.  இதுவரை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி எதிர்வரும் பிப்ரவரி 27 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கிராம சேவை கட்டிடத்திலும், 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை கும்பகோணம் கேஎம்எஸ்எஸ் வளாக பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இம்முகாமில் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை, மனநலம் மற்றும் கண் மருத்துவம் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, வழங்கும் மருத்துவச் சான்று அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.  எனவே, இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன், இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  மேலும் இது வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News