தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 29ஆவது திட்ட மாநாடு

விருதுநகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 29ஆவது திட்ட மாநாடு நடைபெற்றது

Update: 2024-02-25 11:52 GMT
விருதுநகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 29ஆவது திட்ட மாநாடு நடைபெற்றது அருப்புக்கோட்டை சாலையில் VVS திருமண மஹாலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 29 ஆவது திட்ட மாநாடு திட்ட தலைவர் சௌந்தரபாண்டியன் செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசாணை ஆறு மற்றும் அரசாணை 7யை ரத்து செய்ய வேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களின் அடையாளம் கண்டு அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் அரசாணை 100 ன் படி முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் இந்த திட்ட மாநாட்டில் சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா மாநில சங்க நிர்வாகிகள் வண்ணமுத்து உமாநாத் போன்றோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News