3 குற்றவாளிகளுக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 03 குற்றவாளிகளுக்கு 07 ஆண்டுகளுடன் கூடிய 01 மாத சிறை தண்டனை விதித்து மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு;
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு பஞ்சம்பட்டி அருகே லாரியை வழிமறித்து ஓட்டுநர் பிராங்கிளின் ஐசக் ரபி, மற்றும் கிருஷ்ணகுமார் என்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,70,000/- பணம் மற்றும் 02 செல்போன்களை பறித்துச் சென்ற வழக்கில் திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா(43) மதுரை பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ்(42) மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த சுதா(32) ஆகிய 03 நபர்களை அம்பாத்துரை காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், நீதிமன்ற தலைமை காவலர் திருமுருகன் மற்றும் அரசு வழக்கறிஞர் குமரேசன் சீரிய முயற்சியால் இன்று மாலை 6.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அவர்கள், இவ்வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளான இளையராஜா, பாக்கியராஜ் மற்றும் சுதா ஆகிய 03 நபர்களுக்கும் 07 ஆண்டுகளுடன் கூடிய 01 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.5,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.