தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 3பேர் கைது : பைக் பறிமுதல்
தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அலெக்ஸ்ராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் ஜங்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மதன்குமார் (20), தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த முனியசாமி என்பவரது மகன்களான சந்துரு (20) மற்றும் அரவிந்த் (19) ஆகியோர் என்பதும், விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.