மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை

மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

Update: 2024-04-15 13:44 GMT

மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.


மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், FL2 முதல் FL 11 பார்கள் (FL-6 நீங்கலாக) அனைத்தும் 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) இரவு 12.00 மணி வரை மற்றும் 21.04.2024 - (மகாவீர் ஜெயந்தி) ஆகிய தினங்கள் மூடப்படும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தகவல் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், FL2 முதல் FL 11 பார்கள் (FL-6 நீங்கலாக) அனைத்தும் 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) இரவு 12.00 மணி வரை மற்றும் 21.04.2024 - (மகாவீர் ஜெயந்தி) ஆகிய தினங்களில் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ,சங்கீதா, தெரிவித்துக்கொள்கிறார்.

Tags:    

Similar News