கள்ளக்குறிச்சி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது

Update: 2023-11-19 07:11 GMT

காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை,43; விவசாயி.இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன் ஆடுகளை கட்டியிருந்தார். நள்ளிரவு எழுந்து பார்த்தபோது ஆடுகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து, பல்வேறு இடங்களில் தேடினார். ஆடுகள் காணாமல் போனது குறித்து வரஞ்சரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில், மலைக்கோட்டாலத்தை சேர்ந்த சிலரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஆடுகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து ஆடு திருடிய அன்புசெல்வன்,21, அருண்,23; அர்ச்சுணன்,23, ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Tags:    

Similar News