இடத்தகராறு வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது
தீக்குளிக்க முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூர் தென்றல் நகரை சேர்ந்தவர் 55 வயதான செல்வராஜ்.இவரது மகன்கள் 25 வயதான அஜித்ராஜ், 22 வயதான யோகராஜ்.இதில் அஜித் ராஜ் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார் . அதே பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான நீதி மோகன். இவர் திருச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி 40 வயதான அலமேலு. இந்நிலையில் நீதி மோகன் குடும்பத்திற்க்கும் செல்வராஜ் குடும்பத்திற்கும் இடப்பிரச்சனை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் செல்வராஜ் அவரது மகன்கள் அஜித்ராஜ், யோகராஜ் மற்றும் நீதி மோகன் அவரது மனைவி அலமேலு, நீதி மோகனின் தம்பி மனைவி 35 வயதான மீரா ஆகியோர் மீது மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அஜீத்ராஜ் தம்பி யோகராஜ் இருவரும் திருச்சி நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் முன் ஜாமீன் பெற்றனர். தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு செல்வராஜ் மற்றும் அவரது மகன்கள், அஜித்ராஜ் யோகராஜ் ஆகியோர் வந்தனர்.அப்போது நாங்கள் முன் ஜாமீன் பெற்று விட்டோம் .முன் ஜாமீன் பெறாத நீதி மோகனை ஏன் கைது செய்யவில்லை என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அஜித்ராஜ், யோகராஜ் ஆகியோர் தாங்கள் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செல்வராஜ், அஜித்ராஜ், யோகராஜ் ஆகிய மூன்று பேர் மீதும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் எதிர் தரப்பைச் சேர்ந்த நீதி மோகன் அவரது மனைவி அலமேலு நீதி மகளின் தம்பி மனைவி மீரா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மூன்று பேரையும் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆச்சரியப்படுத்தி நீதிமோகனை திருச்சி மத்திய சிறையிலும் அலமேலு மற்றும் மீராவை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.