பொள்ளாச்சியில் வெளிமாநில மதுபானங்கள் கடத்திய 3பேர் கைது
புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சி பகுதிக்கு வெளி மாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்த மூன்று பேரை கைது செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரை 50.க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இரவு பகலாக தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தலையில் பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசார் கேரளா செல்லும் சாலையில் உள்ள சி. கோபாலபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அவ்வழியில் வந்த பிக்கப் வாகனத்தை மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் சோதனை செய்தபோது வாகனத்தில் அதிக அளவில் மதுபான பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த மூன்று நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுபானங்களை வாங்கி தமிழகத்துக்குள் கடத்திவரப்பட்டு கூடுதல் விற்பனைக்கு விற்கப்படுவது விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட 822 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளான செந்தில்குமார் 40, விக்னேஷ் பிரபு 34, ஆனந்தகுமார் 47 வயது உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்..