குமரி : மாணவரை வெட்டியவருக்கு 3 ஆண்டு சிறை

தலைமறைவாக உள்ள மற்றோருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Update: 2023-12-06 03:08 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டம் விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் மகன் ஷெகின் (16). இவர் 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது கருங்கல்பகுதியில் உள்ள ஒரு இசை பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். கடந்த 31- 10 - 2010 அன்று மாணவன் மோட்டார் சைக்கிளில் இசைப் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். வெள்ளங்கட்டி என்ற பகுதியில் செல்லும் போது சுண்ட விளையைச் சேர்ந்த அனில்குமார் (42) உட்பட இரண்டு பேர் மாணவனை தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். அத்துடன் மாணவனை அரிவாளால் வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மாணவன் கருங்கல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனில்குமாருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் தலைமுறைகளாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News