30 வகையான மீட்பு பொருட்கள் தீயணைப்பு துறைக்கு வழங்கல்

மத்திய அரசின், 'ஆப்தமித்ரா' திட்டத்தின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 30 வகையான மீட்பு பொருட்களை, தீயணைப்பு துறையினருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்;

Update: 2025-07-12 08:51 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பேரிடர் கால பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், உயிர் காக்கும் மிதவைகள், துடுப்புகள், நங்கூரம், எமர்ஜென்சி லைட், வெல்டிங் கருவிகள் அடங்கிய பெட்டிகள், அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட மொத்தம் 18.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 30 வகையான மீட்பு பொருட்களை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் அப்துல் பாரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News