திருநெல்வேலி மாநகராட்சி 30வது வார்டு திமுக நிர்வாகிகள் இன்று அப்பகுதியில் போஸ்டர் ஓன்று ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என "வேண்டும் வேண்டும் உதய அண்ணா வேண்டும்" என விருப்பத்தை தெரிவித்து அதனை நிறைவேற்றிட வேண்டி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.