300க்கும் மேற்பட்டோர் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு
போராட்டச் செய்திகள்;
தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000, ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொது வேலை நிறுத்த போராட்டம் இன்று அறிவித்திருந்த நிலையில், புதுக்கோட்டையில் அனைத்து தொழிற்சங்க சங்கங்கள் ஒன்றிணைந்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.