திருச்சி காந்தி சந்தையில் 3,000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
திருச்சி காந்தி சந்தையில் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறையினா்.
By : King 24X7 News (B)
Update: 2024-07-01 08:58 GMT
திருச்சி காந்தி சந்தையில் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட 3,000 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் காந்தி சந்தை மொத்த பழ விற்பனை மண்டிகளில் சனிக்கிழமை இரவு திடீா் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில், 3 பழ மண்டிகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமாா் 3,000 கிலோ எடையிலான மாம்பழங்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் பாதுகாப்பான இடத்தில் கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும், இவற்றிலிருந்து மூன்று சட்டப்பூா்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவுப் பகுப்பாய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.