மக்களுடன் முதல்வர் முகாமில் 302 மனுக்கள் பதிவு
கீழ்வேளூர் பேரூராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 302 மனுக்கள் பதிவு செய்யப்பட்டன.
Update: 2023-12-24 06:51 GMT
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கான தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமை தாங்கினார். வருவாய் கோட்ட அலு வலர் (பொறுப்பு) கண்ணன் பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர் வட்டாச்சியம் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வரவேற்றார். முகாமில் குடிநீர், சொத்து வரி,வீட்டுமனைபட்டா, வங்கி கடன் உள்ளிட்ட 13 துறைகளில் உள்ளடக்கிய சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெறும் வகையில் துறைகள் சார்பாக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் பல்வேறு கோரிக்கைகள் வேண்டி பொது மக்களிடமிருந்து 302 மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமில் பேரூராட்சி துணை தலைவர் சந்திரசேகரன், பே பேரூராட்சி கவுன்சிலர்கள், வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.