ரூ.34.50 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள்
பூமி பூஜையை வட்டார ஆத்மா தலைவர் தொடங்கி வைத்தார்;
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி, திருப்பூண்டி ஊராட்சியில் புதிய 2 வகுப்பறை கட்டிடம் நபார்டு திட்டத்தில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் துரைமுருகு தலைமை வைத்தார். வட்டார ஆத்மா தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் ஏரி தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கட்டிடம் கட்டிட இடம் வழங்கிய கொடையாளர் எஸ்.ஏ.எஸ்.அக்பர் அலி, முன்னாள் ஒன்றிய தலைவர் மு.ப.ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்திமா மேரி, உதவி பொறியாளர் வெற்றிசெல்வன், சிறுபான்மையினர் அணி செயலாளர் ரபீக், வட்டார கல்வி அலுவலர் லீனஸ், பள்ளி தலைமை ஆசிரியர்கள் துரைக்கண்ணன், பார்வதி, ஆஸ் புகாரி, ஜகபர் சாலின், சிக்கந்தர் பாசித், தமீம், சாகுல் ஹமீது, தாஜ்தீன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், முஸ்ஸீம் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.