உளுந்தூர்பேட்டையில் பெண்ணிடம் 35 ஆயிரம் ரூபாய் கொள்ளை
உளுந்தூர்பேட்டையில் பெண்ணிடம் 35 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 12:24 GMT
உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மனைவி குணசுந்தரி, 35; இவர், நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியளவில் வங்கியில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டர் பெட்டியில் வைத்து, மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் அருகே சென்றார்.
பின் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டர் பெட்டியில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து குணசுந்தரி கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.