மாயூரநாதர் கோயில் அபயாம்பிகை சன்னதியில் 350 திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் அபயாம்பிகை சன்னதியில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 350 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்;
By : King 24X7 News (B)
Update: 2024-06-22 11:53 GMT
விளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்கள்
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பிகை சன்னதியில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தோஷங்கள் நீங்கிடவும் மாங்கல்ய பலம் நிலைக்கவும், குழந்தை வரம் வேண்டியும்,பெ
கன்னி பெண்கள் திருமண வரம் வேண்டியும் 350க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்குகள் வைத்து பூஜை செய்தனர். மஞ்சள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து தீபாரதனை காண்பித்து வழிபாடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அபயாம்பிகையாக பூஜித்த திருவிளக்கிற்கு சகஸ்ரநாம அச்சனையும் ஷோடச உபசார தீபாரதனை பூஜைகள் , நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.