
கல்வராயன்மலையில் தாட்கோ திட்டத்தில், 3 ஆண்டுகளில் ரூ.3.67 கோடி திட்ட மதிப்பில், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு கல்வராயன்மலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற, தாட்கோ திட்டத்தின் கீழ் கடந்த, 3 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த, 2022-23ல், 18 பேருக்கு ரூ.96.91 லட்சம் திட்ட மதிப்பில் ரூ.41.97 லட்சம் மானியம் வழங்கப்பட்டது.அதேபோல, கடந்த 2023 - 2024,ல், 17 பேருக்கு ரூ.83.30 லட்சம் திட்ட மதிப்பில் ரூ.45.30 லட்சம் மானியம்; கடந்த, 2024--25 ஆம் நிதியாண்டில், 92 பேருக்கு ரூ.1.87 கோடி திட்ட மதிப்பில் ரூ.95.28 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.3.67 கோடி மொத்த திட்ட மதிப்பில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, ரூ.1.82 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வராயன்மலை மக்கள், இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தாட்கோ நலத் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.