37ம் ஆண்டு குருபூஜை விழா.

ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37ம் ஆண்டு குருபூஜை விழா.;

Update: 2025-12-09 14:22 GMT
பெரம்பலூர் . ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37ம் ஆண்டு குருபூஜை விழா. பெரம்பலூர் டவுன் புதிய பேருந்து நிலையம் வடபுறம் உள்ள ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் சுவாமிகளின் 37 ஆம் ஆண்டு குருபூஜை ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி தலையாட்டி சித்தர் ஆசிரமத்தில் நேற்று டிசம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெற்றறது. அதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணியளவில் அகவல் பாராயணம் படித்தல், சிவனடியார்களின் சிவ பூதக்கண வாத்திய இசையுடன் அலங்காரம், கொல்லி மலை, சதுரகிரி மலைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகள், மற்றும் 108 சித்தர்களின் யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. மதியம் 12 மணி முதல் அன்னதானமும், அது சமயம் சாதுக்களுக்கு வஸ்திரதானமும் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில்அன்னதான குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் தலையாட்டி சித்தரின் அருளை பெற்று பெருவாழ்வு வாழ்க நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர் ஆசிரம நிர்வாகிகள் வே.காமராஜ், வே.நந்தேஸ்வரன், வே.சக்திஸ்வரன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Similar News