39 தொகுதி தபால் வாக்குகள்: தென் சென்னைக்கு அதிகம்

39 மக்களவைத் தொகுதிகளுக்கான தபால் வாக்குகளில் அதிபட்சமாக தென் சென்னைக்கு 5,445 வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 434 வாக்குகளும் அனுப்பப்பட்டன.

Update: 2024-04-18 03:57 GMT

தமிழகத்தில் பதிவாகும் தபால் வாக்குகளை ஒரே இடத்தில் பிரித்து அனுப்பும் வகையில் திருச்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைப்பு மையத்தில் 39 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் தனித்தனியே பிரிக்கப்பட்டன.

இதில் திருவள்ளூா் 4,547, வடசென்னை 4,023, தென் சென்னை- 5,445, மத்திய சென்னை- 3639, ஸ்ரீபெரும்புதூா்- 3385, காஞ்சிபுரம்- 949, அரக்கோணம்- 926, வேலூா்- 1863, கிருஷ்ணகிரி- 1984, தருமபுரி- 597, திருவண்ணாமலை- 1551, ஆரணி- 889, விழுப்புரம்- 798, கள்ளக்குறிச்சி- 2243, சேலம்- 4961, நாமக்கல்- 1516, ஈரோடு- 2908, திருப்பூா்- 4947, நீலகிரி- 1450, கோவை- 4545, திண்டுக்கல்- 1254, கரூா்- 2970, திருச்சி- 5031, பெரம்பலூா்- 3078, கடலூா்- 2322, சிதம்பரம்- 2819, மயிலாடுதுறை- 1408, நாகப்பட்டினம்- 1814, தஞ்சாவூா்- 1812, சிவகங்கை- 3161, மதுரை- 3552, தேனி- 500, விருதுநகா்- 2524, ராமநாதபுரம்- 1948, தூத்துக்குடி- 1667, தென்காசி- 1879, திருநெல்வேலி- 2303, கன்னியாகுமரி- 434 வாக்குகள் என மொத்தம் 93,642 வாக்குகள் பிரித்து வழங்கப்பட்டன.

39 தொகுதிகளிலேயே அதிகபட்சமாக தென் சென்னை தொகுதிக்கு 5,445 தபால் வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதிக்கு 434 தபால் வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு ஒரு தபால் வாக்கு கூட வழங்கப்படவில்லை. ஆனால், பொள்ளாச்சி தொகுதியிலிருந்து வந்திருந்த அலுவலா்கள் 796 தபால் வாக்குகளை கொண்டு வந்திருந்தனா். இவையனைத்தும் பிற தொகுதிகளுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News