4 மாதமாக திறப்பு விழா காணாத பள்ளி இட நெருக்கடியில் மாணவர்கள் அவதி
பள்ளியின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையில், புதிய பள்ளி வகுப்பறை திறக்கப்படாமல் உள்ளது;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில், 1924ம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி துவங்கப்பட்டது. தற்போது, இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் கட்டுமான பணிகள் கடந்தாண்டு, செப்., மாதம் நிறைவு பெற்றது. தற்போது நான்கு மாதங்கள் கடந்த நிலையில், புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்படாமல் உள்ளது. பணிகள் நிறைவடைந்தும் நான்கு மாதங்களாக, இ- - சேவை மைய கட்டடத்தில் இடநெருக்கடியில் மாணவ - மாணவியர் பயிலும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, புதிய கட்டத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி கூறுகையில், 'புதிய பள்ளி வகுப்பறை கட்டடம் இம்மாதம் இறுதியில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறக்க உள்ளார்' என்றார்.