4 ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1050 மனுக்கள் பெறப்பட்டது.

4 ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1050 மனுக்கள் பெறப்பட்டது.;

Update: 2024-08-30 04:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
4 ஊராட்சிகளுக்கு நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 1050 மனுக்கள் பெறப்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கரையூர் ஸ்ரீ சக்தி முருகன் திருமண மண்டபத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான எஸ். வி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது. நடைபெற்ற முகாமில் மாம்பாடி, நாதாம்பாளையம், மனக்கடவு, நல்லாம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு 16 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுருநாதன், எத்திராஜ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். நடைபெற்ற இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் சுமார் 1050 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.இந்நிகழ்ச்சியில் மாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி தண்டபாணி, நாதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, மனக்கடவு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கனகராஜ், நல்லாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தேவநாயகி சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News