நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 போ் கைது

வீ.கே.புதூா் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த 4 போ் கைது.

Update: 2024-04-02 02:17 GMT

கைது

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அருகே வீராணத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வீரகேரளம்புதூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கெளசல்யா தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை நடத்தினா். அப்போது, போலீஸாரைப் பாா்த்ததும் திரும்பிச்செல்ல முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனா். அவரது பைக்கை சோதனையிட்டபோது, அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் வீராணத்தைச் சோ்ந்த சுரேஷ் (34) என்பதும், சுரண்டையைச் சோ்ந்த நாகராஜா (35) என்பவரிடமிருந்து வெடிமருந்துகள் வாங்கி, தனது நண்பா்களான காா்த்திக் (25), மனோசங்கா் (19) ஆகியோருடன் சோ்ந்து 8 நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Tags:    

Similar News