கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ 4 கோடிக்கு வர்த்தகம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று கூடிய வாரச்சந்தைக்கு பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் வியாபாரிகள் வந்திருந்தனர் சந்தைக்கு 6500 ஆடுகள், 3000 பந்தய சேவல்கள் கோழிகள், 360 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் 10 கிலோ எடையுள்ள செம்மறி வெள்ளாடு கிடா ரூபாய் 5100 முதல் 6800 வரை விலை போனது. 20 கிலோ கொண்ட கிடா ரூபாய் 10200 முதல் ரூ13,700 வரை விலை போனது, பந்தய சேவல் ரூ2000 முதல் ரூ 4000 வரை விலை போனது, மேலும் நாட்டு கோழி ஒரு கிலோ ரூ 400 முதல் ரூ500 வரை விலை போனது.
அதேபோல் சின்ன வெங்காயம் கிலோ ரூ 50 முதல் ரூ70 வரையும், பெரிய வெங்காயம் ரூ30 முதல் ரூ 40 வரையும், தக்காளி கிலோ ரூ20 முதல் ரூ.22 வரைக்கும் விலை போனது மொத்தம் ரூ4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.