தனியார் நிறுவன ஊழியரிடம் 4 லட்சம் பறிமுதல் !
கண்டாச்சிபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் 4 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-30 09:22 GMT
பறக்கும்படை
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நந்தகோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது, பஸ்சில் பயணம் செய்த திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த சண்முகவேலு மகன் பிரகாஷ்(வயது 32) என்பவரிடம் ரூ.3 லட்சத்து 98 ஆயிரத்து 900 இருந்தது. விசாரணையில் அவர், பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் விற்கும் நிறுவனத்தில் வசூல் ஊழியராக வேலை செய்து வந்ததும், திருவண்ணாமலையில் கடைகளில் வசூலித்துவிட்டு அந்த பணத்தை விழுப்புரத்துக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.