நாகை மாவட்ட காவல் துறைக்கு 4 புதிய ரோந்து வாகனம் வழங்கல்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் முயற்சியினால் நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக அதிநவீன வசதியுடன் கூடிய நான்கு புதிய வாகனங்கள் மாவட்ட காவல்துறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்ட காவல் துறையிடம் ரோந்து பணிகளுக்காக நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் உள்ளன. இவ்வாறு ரோந்து பணியில் செல்லக்கூடிய முதிர்ந்த நிலையில் உள்ள வாகனங்களை கழிவு செய்து விட்டு அதற்கு பதிலாக நான்கு புதிய மகேந்திரா பொலிரோ பி 6 BSVI(DIAMONT WHITE) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் முன்னெடுப்பால் பெறப்பட்டுள்ளது .
புதிதா க வாங்கப்பட்டுள்ள வாகனங்களிள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், அவை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் முன் டயர்களில் டிஸ்க் பிரேக் அமைக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வாகனங்களிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட வாகனங்களை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் காவலர்களிடம் ஒப்படைத்தார்கள்.