மேதி நகரில் பணம் வைத்த சூதாடிய 4பேர் கைது
மேதி நகரில் பணம் வைத்த சூதாடிய 4பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் காவல் எல்லைக்குட்பட்ட, மண்மங்கலம் பகுதியில் பணம் வைத்து சுடுதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் உதயகுமாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் மன்மங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அருகில் உள்ள மேதிநகரில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட மண்மங்கலம், காமராஜர் நகரை சேர்ந்த பூபதி,அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், செவ்வந்தி பாளையத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து, பெரிய வள்ளிபாளையத்தைச் சேர்ந்த சதாசிவம், ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 600ஐயும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.