வேலூரில் கூலித்தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது
கூலித் தொழிலாளியை தாக்கிய 4 பேரை விரிஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (42), கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (48) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.கன்னிகாபுரம் அருகே வந்த ஏழுமலையை வழிமறித்த வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த 5 பேர் ஆபாசமாக பேசி கட்டைகளால் தாக்கி மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதில் காயமடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சக்கரவர்த்தி (59), கோபி (25) மற்றும் சீனிவாசன் (49) ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள சம்பத் மற்றும் பிச்சாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர். ஏழுமலை தரப்பினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.